சுஷ்மிதா- லலித் மோடி உறவு.. முடிவுக்கு வந்தது எப்படி?

Lalit Modi-Sushmita Relationship : நடிகை சுஷ்மிதா, லலித் மோடி உறவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அது குறித்த சலசலப்புகள் மீண்டும் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.

Published on: June 2, 2026 at 8:45 pm

மும்பை, ஜூன் 2, 2026: லலித் மோடி, சுஷ்மிதா சென் உடனான தனது உறவை 2022-ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் வெளிப்படையாக அறிவித்தார். இது, அவர்களுக்குள் விமானத்தில் நடந்த வாக்குவாதத்திற்குப் பிறகு ஏற்பட்டதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் இதற்காக எந்த வருத்தமும் இல்லை என்றும், சுஷ்மிதா மிகவும் சிறப்பான பெண் என்றும் பாராட்டினார்.

2022-ஆம் ஆண்டு, லலித் மோடி சுஷ்மிதா சென் உடன் விடுமுறையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பயோவில் “மை லவ்” என சுஷ்மிதாவின் பெயரை இணைத்தார். அந்த நேரத்தில் விமானத்தில் வாக்குவாதம் நடந்தபோது, “நான் இதை போஸ்ட் செய்யப் போகிறேன்” என்று கூறி, சுஷ்மிதாவின் முன்னிலையிலேயே பதிவிட்டதாக அவர் ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே-க்கு அளித்த பேட்டியில் லலித் கூறியுள்ளார்.

இந்நிலையில், விமானம் தரையிறங்கும் நேரத்திற்குள் அந்த பதிவு வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் சுஷ்மிதா அதை நீக்கச் சொல்லவில்லை என்றும், அவர் அதற்காக எந்த வருத்தமும் இல்லை என்றும் லலித் மோடி வலியுறுத்தினார். மேலும், அந்த உறவு வெளிப்பட்ட பிறகு, சுஷ்மிதா “திருமணம் இல்லை, மோதிரம் இல்லை, நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன்” என்று தனது மகள்களுடன் புகைப்படம் பகிர்ந்து தெளிவுபடுத்தினார் சுஷ்மிதா.

எனினும், அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. 2025-ஆம் ஆண்டு, லலித் மோடி தனது புதிய துணைவி ரிமா பூரியுடன் உள்ள வீடியோவை பகிர்ந்து, சுஷ்மிதாவுடன் உறவு முடிவடைந்ததை உறுதிப்படுத்தினார். மேலும், காதல் என்ற பெயரில் சுஷ்மிதாவிடம் வைரம், தங்கம் உள்ளிட்ட பொருள்களை லலித் மோடி இழந்தார் என்ற குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். தாம் தான் அவருக்கு ஓர் பாய் ஃபிரண்ட் போல் இருந்தேன் எனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘பிளாஸ்ட்’… 3 நாள் வசூல் என்ன தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com