South Korea wildfires: தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
South Korea wildfires: தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on: March 26, 2025 at 10:43 pm
சியோல், மார்ச் 26 2025: தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 28,800 குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் புதன்கிழமை (மார்ச் 26 2025) தெரிவித்தனர்.
முன்னதாக, தென்கிழக்கு நகரமான உய்சோங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்தார். காவல் துறையினரின் கூற்றுப்படி, இறந்தவர்களில் பெரும்பாலோனார் 60 மற்றும் 70 வயதுடையவர்கள் ஆவார்கள்.
1000 year old Temple consumed by wildfire
— Volcaholic 🌋 (@volcaholic1) March 23, 2025
Thousand-year-old Unramsa Temple on Cheondeungsan Mountain South Korea, was completely destroyed by a forest fire yesterday. It quickly spread due to strong winds, burning down both the main building and its outbuildings.
“Before the… pic.twitter.com/X5Bk6aTjUy
இதற்கிடையில், காட்டுத் தீ காரணமாக குறைந்தது 26 பேர் பல்வேறு அளவிலான காயங்களுக்கு ஆளானதாக தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 17,752 ஹெக்டேர் (43,866 ஏக்கர்) நிலத்தை காட்டுத்தீ எரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய காட்டுத்தீ முந்தைய பலவற்றை விட மோசமானது எனத் தெரிவித்துள்ளார். தென் கொரிய காட்டுத் தீ தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க : 2125ல் ஏலியன்கள் இந்த நாட்டுக்கு வருவார்கள்: பாபா வங்கா கணிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com