Baba Vanga: ஏலியன்கள் முதன் முதலில் இந்த நாட்டுக்கு சமிக்கைகளை அனுப்புவார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார். பாபா வங்கா கணித்த நாடு எது தெரியுமா?
Baba Vanga: ஏலியன்கள் முதன் முதலில் இந்த நாட்டுக்கு சமிக்கைகளை அனுப்புவார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார். பாபா வங்கா கணித்த நாடு எது தெரியுமா?
Published on: March 25, 2025 at 9:53 pm
Updated on: March 25, 2025 at 11:15 pm
இந்த உலகம் எதிர்நோக்கும் பல அசாதாரணமான விஷயங்களைக் கூட முன்கூட்டியே கணித்து இந்த உலகத்திற்கு தெரிவித்தவர் பாபா வங்கா. இவரின் கணிப்புகள் பல அப்படியே நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் முதன் முதலில் எந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் தெரியுமா? இதைக் கூட பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளார்.
இந்த தீர்க்கதரிசி, ஹங்கேரி நாட்டில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகள் முதன் முதலில் தங்களது சமிக்கைகளை அனுப்புவார்கள் என கணித்துள்ளார். பாபா வங்காவின் கணிப்புப்படி சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 2125 ஆம் ஆண்டு வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பு கொள்வார்கள் என்கிறார்.
எனினும் பாபா வங்காவின் இந்த கணிப்புக்கு அறிவியல் பூர்வமாக எந்த ஒரு ஆதாரங்களும் கொடுக்கப்படவில்லை. பொதுவாகவே வெளிநாடுகளில் வேற்றுகிரக வாசிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்தச் சூழலில், விண்மீன் தொகுப்பில் 1600 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு பைனரி நட்சத்திர அமைப்பில் இருந்து ரேடியோ சிக்னல்கள் கிடைத்துள்ளன. இந்த சிக்னல்கள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் பேசுகையில், ” சம்பந்தப்பட்ட ரேடியோ சிக்னல்கள் வெள்ளை குள்ள நட்சத்திரத்திற்கும் சிகப்பு நட்சத்திரத்திற்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் இந்த பிரபஞ்சத்தை ஆராய்வதற்கான அறிவியல் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன. இந்த நிலையில் 2,125 ஆம் ஆண்டு கங்கேரி நாட்டில் வேற்றுக்கிரகவாசிகள் முதன்முதலில் சிக்னல்கள் கொடுப்பார்கள் என பாபா வங்காவின் கணிப்புக்களும் பரவி வருகின்றன.
பிரபஞ்சத்தை ஆராயும் அறிவியல் முயற்சிகள் ஒருபுறம் இருக்க; வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பாக இதுபோன்ற யோகங்களும் தொடர்ந்து வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தி இங்குதான் திணிக்கப்படுகிறது.. அண்ணாமலை ஷார்ப் அட்டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com