ஒரு பழத்தின் எடை 5 கிலோ.. விலை ரூ.3,000.. நூர்ஜஹான் மாம்பழம் தெரியுமா?

Noorjahan Giant Mango: மத்தியப் பிரதேசத்தில் விளையும் நூர்ஜஹான் மாழ்பழத்தின் விலை கிலோ ரூ.3 ஆயிரம் ஆகும். இதன் தனிச்சிறப்பு நம்மை வியக்க வைக்கிறது.

Published on: May 19, 2026 at 3:46 pm

போபால், மே 19, 2026: மத்திய பிரதேசத்தின் அலீராஜ்பூர் மாவட்டத்தில் விளையும் ‘நூர்ஜஹான்’ மாம்பழம் உலகின் மிகப்பெரிய மாம்பழ வகைகளில் ஒன்றாகும். இதன் எடை 2 முதல் 5 கிலோ வரை இருக்கும்; ஒரு பழத்தின் விலை ரூ.3000 வரை இருக்கும்.

நூர்ஜஹான் மாம்பழத்தின் தனிச்சிறப்புகள்

சாதாரண மாம்பழங்கள் சில நூறு கிராம் எடையிலேயே இருக்கும்; ஆனால் நூர்ஜஹான் 2–5 கிலோ வரை எடையைக் கொண்டது. இந்த மாம்பழத்தின் ஒரு பழம் ரூ.1500 முதல் ரூ.3000 வரை விற்கப்படுகிறது. மேலும், இந்த மாம்பழங்கள் மிகுந்த இனிப்பு, தனித்துவமான மணம், அதிக சாறு என தனித்துவமான குணங்கள் கொண்டவை ஆகும்.

இந்த மாம்பழங்கள் அலீராஜ்பூர் மாவட்டத்தின் கட்டிவாடா பகுதியில் அதிகளவில் விளைவிக்கின்றன. அப்பகுதியின் தனித்துவமான மண் மற்றும் வானிலை இந்த மாம்பழத்திற்கு சிறந்த வளர்ச்சியை அளிக்கின்றன. இந்நிலையில், பல தசாப்தங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் மால்வா மற்றும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரவியது என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: கோடைகாலத்தில், ‘பிங்க் கண்’ பாதிப்பு.. தவிர்ப்பது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com