கலகலக்கும் கென்யா.. தெருக்களில் இறங்கிய பெண்கள்.. போராட்டத்தின் பின்னணி என்ன?

Kenya women Protest: பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண் கொலைகள் அதிகரித்து வருவதாகக் கூறி, கென்யாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published on: June 2, 2026 at 1:20 pm

நைரோபி, ஜுன் 2 2026: கென்யாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண் கொலைகள் (Femicide) அதிகரித்து வருவதாகக் கூறி, நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல பகுதிகளில் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பதாகைகள் ஏந்தி, முழக்கங்களை எழுப்பி, சமீபத்தில் குழந்தைகள் காணாமல் போனதும் கொலை செய்யப்பட்டதும் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.

பெண்கள் உரிமை அமைப்புகள் எச்சரிக்கை

பெண்கள் உரிமை அமைப்புகள் பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை தேசிய நெருக்கடியாக அறிவித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் ஒரு உள்ளூர் பாடகி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

காவல்துறை தகவல்

கென்யா போலீசார் தெரிவித்ததாவது, பெரும்பாலான பாலின அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் குடும்பத் தகராறு, நெருங்கிய துணைவர் வன்முறை, பாலியல் குற்றங்கள், தாக்குதல் சம்பவங்கள் மற்றும் தீர்க்கப்படாத குடும்ப மோதல்களுடன் தொடர்புடையவை என கூறினர்.

பொதுமக்கள் கோரிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விரைவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘நான்தான் யேசு’.. துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகையில் இளைஞர்.. சுட்டுக் கொலை!

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!
US Denies Hormuz Report

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com