திருநெல்வேலியில் பயங்கரம்.. மகளை கொன்று தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது

Tirunelveli murder case: திருநெல்வேலி மாவட்டத்தில் 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து, அதை தற்கொலை போல் சித்தரிக்க முயன்றதாக அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: June 2, 2026 at 4:45 pm

திருநெல்வேலி, ஜுன் 2 2026: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே சென்பகராமநல்லூர் பஞ்சாயத்து, நோச்சிக்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த சிவன் கோணார் (60), வைரம்மாள் (57) மகளான அமுதா (21) என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து பெற்றோர் அமுதா தற்கொலை செய்துகொண்டதாக கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

தகவலறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அமுதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் தலைமையில் நடந்த முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலை அல்ல, கொலை என்று சந்தேகம் எழுந்தது.

தற்கொலை நாடகம்

போலீசார் விசாரணையில், அமுதா ஒரு திருமணமான உறவினருடன் தொடர்பில் இருந்ததாக பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை கண்டித்தும், அந்த உறவு தொடர்ந்ததால், பெற்றோர் அமுதாவை தாக்கி, விஷம் குடிக்க வற்புறுத்தியதாகவும், பின்னர் அவர் மயங்கிய நிலையில் கயிற்றில் தொங்கவைத்து தற்கொலை போல நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து சிவன் கோணார் மற்றும் வைரம்மாள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்செங்கோடு துயரம்.. தேர்ச்சக்கரத்தில் சிக்கிய மாணவர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com