‘நான்தான் யேசு’.. துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகையில் இளைஞர்.. சுட்டுக் கொலை!

White House Shooter Incident 2026: வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

Published on: May 24, 2026 at 11:33 am

நியூயார்க், மே 24, 2026: வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது நசீர் பெஸ்ட் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தன்னை “யேசு” என நம்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார், ஆனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்தச் சம்பவம் அமெரிக்க நேரப்படி, சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நடந்துள்ளது; வெள்ளை மாளிகை அருகே உள்ள 17வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ பகுதி அருகே நடந்துள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், நசீர் பெஸ்ட் பாதுகாப்பு சோதனைப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அதிகாரிகளிடம் மூன்று முறை சுட்டார்” என்றனர்.

இந்த நிலையில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நசீர் காயமுற்றார். இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட பாதுகாப்பு போலீசார், ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் 21 வயதான இளைஞர் நசீரை அதிகாரிகள் உளவியல் சிக்கல் கொண்டவர் எனக் கூறியுள்ளனர்.

மேலும், “நான் யேசு கிறிஸ்து, கைது செய்யப்பட வேண்டும்” என்று முன்பு நீதிமன்றத்தில் கூறியதாகவும் சில பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்த போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில்தான் இருந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ராகவ் சத்தாவை தோளில் தூக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்.. பூசாரி பகிர்ந்த திருமண விழா சுவாரஸ்யம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com