Mythology: ஜாதகத்தில் சனி பிடிக்கிறது என்றாலே மக்கள் பயந்து முன்னதாகவே கோவில் கோவிலாக அலைந்து திரிவார்கள். அப்படி இருக்க சிவபெருமானையே பிடித்த சனி பகவான் கதை தெரியுமா?
Mythology: ஜாதகத்தில் சனி பிடிக்கிறது என்றாலே மக்கள் பயந்து முன்னதாகவே கோவில் கோவிலாக அலைந்து திரிவார்கள். அப்படி இருக்க சிவபெருமானையே பிடித்த சனி பகவான் கதை தெரியுமா?
Published on: March 27, 2025 at 10:23 am
கர்மத்தின் அதிபதியான சனி பகவான் தவறு செய்பவர்களை மட்டுமே தண்டிப்பார். முன் ஜென்மத்தில் செய்த வினைக்கு ஏற்ப இப்ப பிறவியில் ஒருவரின் ராசி கட்டத்தில் அமர்கிறார் சனிபகவான். பின்னர் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப பல தொல்லைகளை கொடுக்க ஆரம்பிக்கிறார். இது போன்ற தொல்லைகளை தாங்க முடியாத முனிவர்கள் இதற்கு பரிகாரம் என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்து சனி பகவானுக்கு இந்த வரத்தையும் பதவியையும் கொடுத்த சிவபெருமானிடமே சென்று இதை தடுத்து நிறுத்த சொல்வோம் என்று முடிவு செய்து கோபத்துடன் சிவபெருமானை சந்திக்க சென்றனர்.
இதைக் கண்ட நந்தி சிவபெருமானிடம் முனிவர்கள் வருவதை பற்றி கூறியதும் முனிவர்கள் வரும் நோக்கத்தை உணர்ந்த சிவபெருமான் சனி பகவானை அழைத்து தன்னை இரண்டரை நாழிகை பிடித்துக் கொள்ளுமாறு கூறினார். உலகற்கே படியளக்கும் பெருமானே நான் எப்படி பிடிப்பது என்றார் சனி. இப்போது விவாதிக்க நேரமில்லை சொன்னதை செய் என்றதும் சனியும் சிவபெருமானை பிடித்தார்.
அப்போது சரியாக முனிவர்கள் அங்கே வந்தனர் சனி பிடித்த காட்சியையும் கண்டனர். அடுத்த நிமிடமே சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் சண்டை மூண்டது. பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்வதை கண்ட முனிவர்கள் அதிர்ச்சியடைந்தனர். முனிவர்களை கண்ட சிவபெருமான் என்ன காரணத்திற்காக வந்தீர்கள் என்று கேட்க ஒன்றும் இல்லை இறைவா உங்கள் தரிசனத்திற்காக வந்தோம் பார்த்து விட்டோம் புறப்படுகிறோம் என்று கூறி கிளம்பினர். நேரம் நிறைவு பெற்றதும் சனி சிவபெருமானை விட்டு விடுகிறார்.
இதையும் படிங்க : பெருமாளுக்கு தலைமுடியை வழங்கிய மலை இளவரசி ; திருப்பதி முடி காணிக்கை வரலாறு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com