கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்; என்ன நடந்தது?

Canada: கனடா நாட்டில் இந்திய மாணவி தான்யா தியாகியின் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஏனெனில் இன்னமும் அதிகாரிகள் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்தவில்லை.

Published on: June 20, 2025 at 1:18 pm

ஒட்டாவா, ஜூன் 20 2025: கனடா நாட்டின் கல்கரி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இந்திய மாணவி ஒருவர் தெளிவற்ற சூழ்நிலையில் இறந்துவிட்டதாக வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வியாழக்கிழமை (ஜூன் 19 2025) தெரிவித்துள்ளது. தான்யா தியாகி என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி, உயர் படிப்புக்காக கனடா சென்றிருந்தார். இதற்கிடையில் அவரது மரணத்துக்கு தூதரகம் தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இரங்கல் செய்தியில், “கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய மாணவியான தான்யா தியாகியின் திடீர் மறைவால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனடா அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடாததால், அவரது மரணத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை.

வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள் சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான துயர சம்பவங்களில் தான்யா தியாகியின் மரணமும் இணைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், 20 வயதான இந்திய மாணவி சுதிக்ஷா கோனங்கி டொமினிகன் குடியரசில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 10 மணி நேரத்தில் 12 இரு தரப்பு சந்திப்பு; கனடா ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சுறுசுறுப்பு!

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர் வாக்குமூலம்!
Australian Girl Killed in Pakistan

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com