Vanathi Srinivasan: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் நிச்சயமாக திரும்பி வருவார்கள் என்கிறார் அக்கட்சியின் மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன்.
Vanathi Srinivasan: பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் நிச்சயமாக திரும்பி வருவார்கள் என்கிறார் அக்கட்சியின் மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன்.

Published on: June 15, 2026 at 12:05 pm
திருப்பூர், ஜூன் 15, 2026: திருப்பூரில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி 4,200 நாட்கள் தொடர்ந்து பதவி வகித்து சாதனை படைத்துள்ளதாகவும், 23 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா எதிர்க்கட்சிகளின் சதியால் நிறைவேறவில்லை என்றும், அமைச்சரவை உள்ளிட்ட துறைகளில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு மோடி வழிவகுத்ததாகவும் தெரிவித்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில் திருப்பூரின் வளர்ச்சி நான்கு மடங்கு அதிகரிக்க அந்நிய நேரடி முதலீடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ரயில்வே, சாலை, வீடு, விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் வானதி சீனிவாசன் கூறினார். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் மோடி எதுவும் செய்யவில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும், காஷ்மீர் தீவிரவாதிகளை வீழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட சாதனைகளை எடுத்துக்காட்டினார்.
கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், மின்சாரத் துறையில் ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனது குறித்து சந்தேகம் எழுப்பினார். தவெக ஆட்சிக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றாலும், திறமையற்ற நிர்வாகம் குறித்து எதிர்க்கட்சியாக பாஜக கருத்துகளை வெளிப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் பிரதமர் மோடிக்காக திரும்பி வருவார்கள் என வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்தார். பாஜக சித்தாந்தம் சார்ந்த கட்சி, தனிநபர் அல்லது குடும்பம் சார்ந்த கட்சி அல்ல என்றும், முக்கிய முடிவுகளை எடுக்க கமிட்டி உள்ளதால் தனிநபர் வெளியே செல்வது கட்சியை பாதிக்காது என்றும் கூறினார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக நலனை காக்க பாஜக துணை நிற்கும் என்றும், நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க :எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து வெளியேறலாம்.. மீசையை முறுக்கும் திருமாவளவன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com