Christian preacher arrested in Tuticorin : கிறிஸ்தவ தேவாலயம் வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Christian preacher arrested in Tuticorin : கிறிஸ்தவ தேவாலயம் வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Published on: June 15, 2026 at 12:10 pm
தூத்துக்குடி, ஜூன் 15, 2026: தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள ஆனந்த நகர் பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் பணியாற்றி வந்த மதபோதகர் அருள்ராஜ், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேவாலயத்திற்கு வந்த சிறுமி, மதபோதகரின் அத்துமீறல் குறித்து தன் தாயிடம் தெரிவித்ததால், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, சிறுமியின் தாய் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, மதபோதகர் அருள்ராஜை கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வெளிப்பட்டதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தேவாலயத்தில் பணிபுரிந்த மதபோதகர் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்திருப்பது உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இச்சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. சிறுமி மீது நிகழ்ந்த பாலியல் தொல்லை சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : என் கணவரின் உடலை பார்க்க விரும்புகிறேன்.. தூத்துக்குடி கப்பல் மாலுமி மனைவி உருக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com