விஜய்- சங்கீதா திருமண முறிவு வழக்கு.. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை!

Vijay–Sangeetha Divorce Case: விஜய்- சங்கீதா திருமண முறிவு (விவாகரத்து) வழக்கின் விசாரணை இன்று (திங்கள்கிழமை) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடக்கிறது.

Published on: June 15, 2026 at 12:13 pm

Updated on: June 15, 2026 at 12:40 pm

சென்னை, ஜூன் 15, 2026: செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி சங்கீதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கு இன்று (ஜூன் 15, திங்கள்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் நேரில் ஆஜராகும் போது பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்து, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இருதரப்பின் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகி விளக்கங்களை அளித்தனர்.

அந்த நேரத்தில், நீதிபதி நேரில் ஆஜராகும் வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது, ஜூன் மாதத்தில் ஆஜராக வாய்ப்பிருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நீதிபதி வழக்கை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி, இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், விஜய் மற்றும் சங்கீதா நேரிலோ அல்லது இன்கேமரா முறையிலோ ஆஜராகி விளக்கமளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஜய் தற்போது முதலமைச்சராக இருப்பதால், அவரது பாதுகாப்பு மற்றும் நிர்வாக பொறுப்புகளை கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய அவசியத்திலிருந்து நீதிபதி விலக்கு அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவரை சங்கீதா தரப்பில் மட்டுமே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் தரப்பில் இருந்து எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது முதல்வர் விஜய், சங்கீதா ஆகியோர் ஆஜராகாத நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி வருகிறது.

இதையும் படிங்க : TVK-க்கு பெரும்பான்மை இருந்தபோது, ஆட்சியை பிடிக்க நினைத்தது யார்? – செங்கோட்டையன்

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Edappadi Palanisamy

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
₹135 Crore Special Package

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com