தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: டி.டி.வி தினகரன் கண்டனம்

T TV Dhinakaran | “எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

Published on: October 10, 2024 at 2:53 pm

TTV Dhinakaran | அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்திற்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்டுவது எப்போது?

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 21 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அவர்களின் நான்கு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையை கண்டித்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் 21 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – இலங்கை உறவுகளை மேம்படுத்தும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் அண்மையில் இலங்கை பயணம் மேற்கொண்ட நிலையில், 50 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலின்றி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க விமானப்படை சாகச நிகழ்ச்சி; அடிப்படை வசதிகள் கூட இல்லாத அலட்சியம்: டி.டி.வி கண்டனம்!

பவர்கட் பிரச்னைக்கு தீர்வு.. மின்சாரத் துறைக்கு ரூ.15,828 ஒதுக்கீடு! TN Budget 2026

பவர்கட் பிரச்னைக்கு தீர்வு.. மின்சாரத் துறைக்கு ரூ.15,828 ஒதுக்கீடு!

TN Budget 2026 : மின் விநியோகத்தின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள 40,000 பழைய மின்மாற்றிகள் மாற்றப்படவுள்ளன….

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. ரூ.560 கோடி அறிவிப்பு Gold ring scheme

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. ரூ.560 கோடி அறிவிப்பு

Gold ring scheme: தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது….

தமிழக அரசு 2026-27 நிதிநிலை அறிக்கை.. முழு விவரம்! TN Budget 2026

தமிழக அரசு 2026-27 நிதிநிலை அறிக்கை.. முழு விவரம்!

TN Budget 2026 : தமிழக அரசு 2026-27 நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது….

பின்தங்கிய மாவட்டங்களில் தொழில்பேட்டைகள்.. த.வெ.க பட்ஜெட்டில் அறிவிப்பு Budget 2026

பின்தங்கிய மாவட்டங்களில் தொழில்பேட்டைகள்.. த.வெ.க பட்ஜெட்டில் அறிவிப்பு

Budget 2026: பின்தங்கிய மாவட்டங்களில் தொழில்பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது….

திரிஷா இந்நாட்டின் பிரதமரா? ஆர்.எஸ் பாரதி கேள்வி R.S. Bharathi

திரிஷா இந்நாட்டின் பிரதமரா? ஆர்.எஸ் பாரதி கேள்வி

R.S. Bharathi: திரிஷா இந்நாட்டின் பிரதமரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com