TTV Dhinakaran | அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றவர்களில் 5 பேர் உயிரிழப்பு – குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் லட்சக்கணக்கான பொதுமக்களை இன்னல்களுக்குள்ளாக்கிய தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற பார்வையாளர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளையோ, நிகழ்ச்சி நிறைவடைந்து திரும்பிச் செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகளையோ செய்து தராத தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே 5 பேரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கும் பவளவிழா மாநாட்டை நடத்துவதற்கும் அதீத கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் திமுக அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, நீர்ச்சத்து குறைபாடு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
- சும்மா.. கெத்தா ஸ்டைலா.. காரைக்குடியில் மம்முட்டி!
Mammootty: மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடியில் நடக்கிறது.
- நெருப்பு டா.. நெருங்கு டா.. துருவ் விக்ரம் படம்.. இசை யார் தெரியுமா?
Dhruv Vikram: நடிகர் துருவ் விக்ரம் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் இசையமைக்கவுள்ளார்.
- அதிதி- அர்ஜூன் தாஸ் ரொமாண்டிக் லவ் ஸ்டோரி.. ஒன்ஸ்மோர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Once More: ‘ஒன்ஸ் மோர்’ ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- 52வது வயதில் கஜோல்.. வெண்ணிலவே வெண்ணிலவே.!
Kajol: 52வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகை கஜோல். ஆடம்பரமான கொண்டாட்டங்களை விட குடும்பத்தினருடன் செலவிடும் நேரம்தான் சிறந்தது என்கிறார்.
- மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி.. தமிழக பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
Govt Law College : மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி நிறுவப்படும் என தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்