Durai Vaiko vs KN Nehru : நான் அரசியலுக்கு வந்தது விபத்து என கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலளித்துள்ளார்.
Durai Vaiko vs KN Nehru : நான் அரசியலுக்கு வந்தது விபத்து என கே.என்.நேரு விமர்சனத்துக்கு துரை வைகோ பதிலளித்துள்ளார்.

Published on: September 19, 2026 at 12:39 pm
சென்னை, செப்.19, 2026: தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துரை வைகோ தி.மு.க.வில் இணைய விரும்பியதாக கூறியிருந்த நிலையில், அதற்கு மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ பதிலளித்துள்ளார். தாம் தி.மு.க.வில் இணைய விரும்பியதாக கே.என்.நேரு கூறுவது கட்டுக்கதை என்றும், தனக்கு தனிப்பட்ட அரசியல் விருப்பமோ, பதவி வேட்கையோ கிடையாது என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கே.என்.நேருவிடம் இருந்து தனக்கு பல்வேறு அரசியல் கருத்துகள் முன்பு தெரிவிக்கப்பட்டதாக துரை வைகோ கூறியுள்ளார். குறிப்பாக, “கலைஞர் கருணாநிதி காலத்துடன் தி.மு.க. முடிந்துவிட்டது” என்றும், “மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது” என்றும் கூறியவர்தான் கே.என்.நேரு என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தி.மு.க.வில் பலரது அரசியல் வளர்ச்சிக்கு கே.என்.நேரு தடையாக இருந்ததாகவும் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தேர்தல் தோல்விக்கு கே.என்.நேருவே காரணம் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த தி.மு.க. முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட தன்னைச் சுற்றியிருந்த பலரை கே.என்.நேரு அரசியலில் இருந்து ஒதுக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், உதயநிதி ஸ்டாலினை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று கூறியவரும் கே.என்.நேருதான் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தான் அரசியலுக்கு வந்தது எதிர்பாராத நிகழ்வு என்றும் துரை வைகோ கூறியுள்ளார். தனது தந்தை வைகோவின் விருப்பத்திற்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறினார். வேறு சின்னத்தில் போட்டியிட்டால் தி.மு.க.வினரே ஒத்துழைக்க மாட்டார்கள் என தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் எந்த சூழ்நிலையிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன் என அன்றே தெரிவித்ததாகவும் துரை வைகோ கூறியுள்ளார்.
மேலும், கூட்டணியில் இருந்த காலத்திலேயே தன்னைப் பற்றி தி.மு.க.வினர் அவதூறாக பேசியதாகவும் துரை வைகோ தெரிவித்துள்ளார். தனிமனித தாக்குதல்களுக்கு தான் பயப்படப் போவதில்லை என்றும், தன்னை யாராலும் மிரட்ட முடியாது என்றும் கூறிய அவர், தன்னிடம் பல விஷயங்கள் தெரியும் என்றும், அவற்றை அனைத்தையும் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பேச வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கே.என்.நேரு–துரை வைகோ இடையிலான கருத்து மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க : தனியார் பள்ளிகள் அனுமதிக்கு லஞ்சம்? அன்பில் மகேஷிடம் கேட்கப்பட்ட 246 கேள்விகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com