பணம், பேராசை, ஆள்மாறாட்டம்: திருநெல்வேலி தலைமை காவலர் பெண்ணுடன் கைது!

Tirunelveli | திருநெல்வேலி தலைமை காவலர் ஒருவர், பெண் ஒவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: October 6, 2024 at 1:22 pm

Tirunelveli Head Constable Arrest | திருநெல்வேலி நகரக் காவல்துறையில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவரும், பெண் ஒருவரும் ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சனிக்கிழமை (அக்.5,2024) கைது செய்யப்பட்டனர். முன்னதாக, மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சசிகுமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம், வி.கே.புதூரை சேர்ந்தவர் முருகராஜ், 41. இவர், திருநெல்வேலி சந்திப்பு போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் குடும்பம் பாளையங்கோட்டையில் உள்ள வி.எம் சத்திரத்தில் வசித்துவருகிறார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி (40) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இருவரும் வருவாய்த் துறை மற்றும் பிறரிடம் பட்டா பெற்றுத் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் சசிகுமாரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அப்போது, வளர்மதி தன்னை மாவட்ட வருவாய் அலுவலராகக் கூறி, பட்டா மாறுதல் மற்றும் புறம்போக்கு நிலங்களுக்கு ஆவணங்கள் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. அதை உண்மை என நம்பிய சசிகுமார், மதுரையில் ஒரு நிலத்திற்கு பட்டா வழங்குவதற்காக ₹10 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வளர்மதி பணமோ அல்லது பட்டாவோ வழங்கவில்லை. சிக்கலில் சிக்கிய முருகராஜ், காசோலை கொடுத்துள்ளார். எனினும் இதில் பணம் இல்லை. இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கைது செய்தார். இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்! Tirunelveli Job Notification

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!

Tirunelveli Job Notification: திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மீன் ஏற்றிச் சென்ற மினிலாரியில் ரூ.3 கோடி கஞ்சா.. திருநெல்வேலியில் பரபரப்பு! Thoothukudi

மீன் ஏற்றிச் சென்ற மினிலாரியில் ரூ.3 கோடி கஞ்சா.. திருநெல்வேலியில் பரபரப்பு!

Thoothukudi: தூத்துக்குடி மாவட்டம் குலத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனையின்போது, மீன் ஏற்றிச் சென்ற மினி லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 338 கிலோ கஞ்சாவை…

மக்கள் தயவில் தமிழக வெற்றிக்கழக அரசு.. அமைச்சர் ராஜ்மோகன்! Rajmohan

மக்கள் தயவில் தமிழக வெற்றிக்கழக அரசு.. அமைச்சர் ராஜ்மோகன்!

Rajmohan: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், மக்களுக்கு நல்லது செய்வதில்தான் கட்சிகளிடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்; வார்த்தை ஜாலங்களில் அல்ல என்று…

திருநெல்வேலி அல்வா விலை உயர்வு.. நியூ ரேட் என்ன தெரியுமா? Tirunelveli Halwa Price Hiked

திருநெல்வேலி அல்வா விலை உயர்வு.. நியூ ரேட் என்ன தெரியுமா?

Tirunelveli Halwa Price Hiked : திருநெல்வேலி அல்வா கிலோ ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது; இந்த நிலையில் புதிய விலை குறித்து பார்க்கலாம்….

திருநெல்வேலியில் ஆகஸ்ட் 25-ல் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியுமா? Power Cut

திருநெல்வேலியில் ஆகஸ்ட் 25-ல் மின்தடை! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Power Cut: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி காலை…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com