கல்லூரி மாணவிக்கு தொல்லை.. பஸ் கண்டக்டர் கைது

Tirunelveli : பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நடத்துனர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Published on: June 24, 2026 at 4:23 pm

திருநெல்வேலி, ஜூன் 24, 2026: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டியில் நேற்று காலை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக சீண்டியதாக பேருந்தின் நடத்துனர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், பேருந்தின் நடத்துநர் குமாரசாமி (59) மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாணவியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், நடத்துநர் மாணவியிடம் தவறான முறையில் நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவம், பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. மாணவிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்யும் சூழலை உருவாக்குவது அவசியம் என சமூகத்தில் வலியுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க : நிறைமாத கர்ப்பிணிக்கு பணி நியமன ஆணை.. மேடையில் இருந்து இறங்கிவந்து வழங்கிய விஜய்!

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்! Minister Viswanathan on Mekedatu

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com