SBI Net Profit Rises: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது; அதேநேரம், வராகடன் சரிவை சந்தித்துள்ளது.
SBI Net Profit Rises: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது; அதேநேரம், வராகடன் சரிவை சந்தித்துள்ளது.

Published on: August 8, 2026 at 6:41 pm
மும்பை, ஆக.08, 2026: நடப்பாண்டு முதல் காலாண்டில் இந்திய ஸ்டேட் வங்கி (SBI) வரலாற்றிலேயே அதிக லாபமான ரூ.21,121 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. அதேசமயம், வங்கியின் மோசமான கடன் விகிதம் (NPA) கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2026 ஜூன் காலாண்டில் வியாபாரத்தில் ரூ.110 லட்சம் கோடி என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 10.23% அதிகரித்து, ரூ.21,121 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி வருவாய் அதிகரிப்பு மற்றும் 18.63% அளவுக்கு கடன் வழங்கல் வளர்ச்சி, இந்த சாதனையின் முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வங்கியின் செயல்பாட்டு லாபம் 9.77% அதிகரித்து ரூ.33,529 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் (NII) 14.88% உயர்ந்து ரூ.46,992 கோடியாகவும் பதிவாகியுள்ளது. உள்நாட்டு வட்டி விகிதம் (NIM) 3% ஆக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த NIM 2.86% ஆக உள்ளது.
வங்கியின் வியாபாரம், சில்லறை, வேளாண்மை மற்றும் சிறு, நடுத்தர தொழில் (SME) துறைகளில் வலுவான வளர்ச்சியால் முன்னேறியுள்ளது. சில்லறை கடன்களில் தங்கக் கடன்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. வெளிநாட்டு கடன்கள் ரூபாய் மதிப்பில் 21.38% மற்றும் டாலர் மதிப்பில் 9.97% உயர்ந்துள்ளன. நிறுவனக் கடன்கள் 18.05% உயர்ந்துள்ளன.
வைப்புத் தொகைகள் 9.73% அதிகரித்து ரூ.60.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன. சில்லறை கால வைப்புகள் 14.39% உயர்ந்துள்ளன. குறைந்த செலவிலான CASA வைப்புகள் 9.3% உயர்ந்துள்ளன. சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு (CASA) விகிதம் 39.24% ஆக உள்ளது.
மிக முக்கியமாக, வங்கியின் சொத்து தரம் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மேம்பட்டுள்ளது. மொத்த NPA 1.47% ஆகவும், நிகர NPA 0.38% ஆகவும் குறைந்துள்ளது. புதிய மோசமான கடன்கள் ரூ.7,000 கோடி அளவுக்கு இருந்தாலும், அதில் 40% மீண்டும் சாதாரண சொத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சாதனை, SBI வங்கியின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.
இதையும் படிங்க; யூபிஐ பயன்பாட்டிற்கு கட்டணமா? PCI அளித்த முக்கிய விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com