அதே திரைக்கதை… அதே வசனம்; திமுக அரசின் சமூக நீதி மோசடி: ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss | அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா? என ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: October 6, 2024 at 12:59 pm

Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது.

ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு விட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. திமுக அரசின் சமூக நீதி மோசடி கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவத்தின் விவரங்களை தமிழக அரசு வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசு நினைத்தால் அந்த விவரங்களை ஒரு வாரத்தில் திரட்டி விட முடியும். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி சூறையாடல்கள் நடப்பதால் தான் அவை குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

மடியில் கனமில்லை என்றால் திராவிட மாடல் அரசுக்கு வழியில் பயம் தேவையில்லை. சில சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு அதிகமாகவும், வன்னியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகையை விட மிகவும் குறைவாகவும் பிரதிநிதித்துவம் இருப்பதால் தான் இந்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்பது இதிலிருந்து உறுதியாகியுள்ளது.

வன்னிய மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும், மீண்டும் அந்த மக்களுக்கு துரோகங்களையும், சமூக அநீதியையும் தான் இழைத்து வருகிறது. அதனால் தான், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதை தடுக்கும் வகையில் பொய்யான, திரிக்கப்பட்ட, அரைகுறையான புள்ளி விவரங்களை வெளியிட்டு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து அதுகுறித்து பத்தி பத்தியாக செய்தி வெளியிடச் செய்த தமிழக அரசு, அனைத்து சமூகங்களுக்குமான 35 ஆண்டுகால புள்ளி விவரங்களை வெளியிட மறுக்கிறது. தங்களின் சமூகநீதி முகத்திரை கிழிந்து விடும் என்று அஞ்சுகிறது.

உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக, பொம்மையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு, திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், அதை அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தும்.

திராவிட மாடல் ஏமாற்று அரசு அணிந்திருக்கும் சமூகநீதி முகமூடியை கிழித்து அதன் சமூகநீதி மோசடிகளை அம்பலப்படுத்தும். மக்கள் மன்றத்தில் திமுகவின் சமூகஅநீதிகளை தோலுரித்து சரியான பாடம் புகட்டப்படுவதை உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்….

சேலம் குப்பை எரிஉலை திட்டம்.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு Salem Incinerator Row

சேலம் குப்பை எரிஉலை திட்டம்.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Salem Incinerator Row: உலகம் முழுவதும் குப்பை எரிஉலைத் திட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும், சேலம் ரயில் நிலையம் அருகே குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக…

நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது.. அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது.. அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: “10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது” என பா.ம.க தலைவர் அன்புமணி…

ஆவின் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்திடுக.. அன்புமணி ராமதாஸ் Aavin Milk in Tamil Nadu

ஆவின் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்திடுக.. அன்புமணி ராமதாஸ்

Aavin Milk in Tamil Nadu : ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின்…

மீண்டும் தலைவரானார் அன்புமணி ராமதாஸ்.. ஆந்திரா அரசியலில் களம் காணும் பாட்டாளி மக்கள் கட்சி..! Anbumani Ramadoss

மீண்டும் தலைவரானார் அன்புமணி ராமதாஸ்.. ஆந்திரா அரசியலில் களம் காணும் பாட்டாளி மக்கள்

Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஏகமனதாக தேர்வாகியுள்ளார்; இக்கூட்டத்தில் பேசிய அவர் ……

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com