CBI PROBE DEMAND: நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
CBI PROBE DEMAND: நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: July 15, 2026 at 2:04 pm
சென்னை, ஜூலை 15, 2026: நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறையில் பாதுகாப்பில் இருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் முழுமையான உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றால், தமிழக அரசின் விசாரணை மட்டும் போதாது. சுயாதீனமான அமைப்பான சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்றும், சம்பவத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் பெனிக்ஸ், ஜெயராஜ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார் வரிசையில் தவெக ஆட்சியில் சபரிநாதனின் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
தொடக்கத்திலிருந்தே இந்த கொலையை மூடி மறைக்க முயற்சிகள் நடந்த நிலையில், தமிழக காவல்துறையினர் விசாரித்தால் இந்த வழக்கில் நீதி கிடைக்காது. எனவே, சாத்தான்குளம், மடப்புரம் வழக்கின் விசாரணைகள் எவ்வாறு சிபிஐக்கு மாற்றப்பட்டனவோ? அதேபோல், இந்த வழக்கும் இந்த வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்களுக்கு வழக்கின் விசாரணை முடியும் வரை பிணை மறுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிந்தைய இரு மாதங்களில் காவல்துறையினரின் காவலில் இருந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
அதற்கான காரணங்களை கண்டறியவும் விசாரணைக்கு ஆணையிட வேண்டும். கொடூரமாக கொல்லப்பட்ட சபரிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க மாதாந்திர பராமரிப்பு பணி… தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com