Ramzan special train: புனித ரமலானை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி மற்றும் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Ramzan special train: புனித ரமலானை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி மற்றும் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Published on: March 23, 2025 at 2:44 pm
சென்னை, மார்ச் 23 2025: புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
அதன்படி, திருச்சி-தாம்பரம்-திருச்சி பிரிவில் ஜன்சதாப்தி விரைவு ரயில் மற்றும் தாம்பரம்-கன்னியாகுமரி-தாம்பரம் பிரிவில் பண்டிகை விரைவு ரயில் ஆகியவற்றை இயக்கவுள்ளது.
ரம்ஜான் சிறப்பு ரயில்கள்
அதன்படி, திருச்சி-தாம்பரம் ஜனசதாப்தி விரைவு ரயில் (06048) மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
அதேநேரத்தில் இந்த ரயில் மறுமார்க்கமாக, சிறப்பு ரயில் (06047) அதே நாளில் பிற்பகல் 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருச்சியை அடையும்.
இந்த ரயிலில் சிறப்பு ரயில்களில் 2 ஏசி சேர் கார்கள், 10 சேர் கார்கள், ஆறு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். மேலும், இரண்டு இரண்டாம் வகுப்பு பிரேக்-கம்-லக்கேஜ் வேன்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரயில்
இதேபோல், தாம்பரம்-கன்னியாகுமரி விழா விரைவு ரயில் (06037) மார்ச் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரியை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயில் மறுமார்க்கமாக, சிறப்பு ரயில் (06038) மார்ச் 31 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (மார்ச் 23, 2025) ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்தத் தகவல்கள் தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: மார்ச் 29 முதல் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com