Southern Railway: திருச்சி தாம்பரம் இடையே சிறப்பு ரயில் மார்ச் 29 முதல் தொடங்குகிறது. இந்த ரயில் எப்போது புறப்படும் தெரியுமா?
Southern Railway: திருச்சி தாம்பரம் இடையே சிறப்பு ரயில் மார்ச் 29 முதல் தொடங்குகிறது. இந்த ரயில் எப்போது புறப்படும் தெரியுமா?
Published on: March 22, 2025 at 10:44 pm
சென்னை, மார்ச் 22 2025: திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது, மார்ச் 29, 30, 31 ஆகிய நாள்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும்.
அந்த வகையில் இந்த சிறப்பு ரயில், திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதையடுத்து, மறு மார்க்கத்தில் மாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.
மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
மறு மார்க்கத்தில் மார்ச் 31ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும். இந்தச் செய்தியை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : திருப்பதி கோயில் இனி இந்துக்களுக்கு மட்டுமே: சந்திர பாபு நாயுடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com