Tirupati temple: திருப்பதி கோயில் இந்துக்களுக்கு மட்டும்தான். திருப்பதியில் உள்ள ஏழு மலைகளும் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என அதிரடியாக அறிவித்துள்ளார் சந்திர பாபு நாயுடு.
Tirupati temple: திருப்பதி கோயில் இந்துக்களுக்கு மட்டும்தான். திருப்பதியில் உள்ள ஏழு மலைகளும் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என அதிரடியாக அறிவித்துள்ளார் சந்திர பாபு நாயுடு.
Published on: March 22, 2025 at 10:23 pm
ஹைதராபாத், மார்ச் 22, 2025: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியான அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். ஆந்திராவின முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பல்வேறு நடவடிக்கைகளை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக டந்த ஜெகன்மோகன் ஆட்சியில் இருந்த பல்வேறு விஷயங்களை மாற்றிவருகிறார்.
அது ஒருபுறம் இருக்க தற்போது, ‘திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி’ என அதிரடியான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த பின் சந்திரபாபு நாயுடு மேலும் கூறுகையில், பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது திருப்பதி கோயிலில் பணிபுரிந்தால், அவர்களது உணர்வுகள் புண்படுத்தப்படாமல் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், தனது பேட்டியில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள ஏழு மலைகளும் தேவஸ்தானத்திற்கு மட்டுமே சொந்தமானது. அதனை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவுசெய்தார். தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, கோயில் அமைந்துள்ள மலைகளில் வணிக நோக்கத்துடன் செயல்பட யாருக்கும் அனுமதி இல்லை.
மலை அடிவாரத்தில் தனியார் ஓட்டல்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.27 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார். ஒருபக்கம் அம்மாநில துணை முதல்வர் இந்து சமயம் தொடர்பான பல்வேறு கருத்துகளை அதிரடியாக பேசிவரும் நிலையில், முதல்வரும் பக்தர்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : டெல்லியில் சிறுமி உள்பட 7 வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் கைது: நாடு கடத்த நடவடிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com