Nanguneri car-auto crash : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோ மீது கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
Nanguneri car-auto crash : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோ மீது கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Published on: June 13, 2026 at 5:50 pm
திருநெல்வேலி, ஜூன் 13, 2026: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் பயணித்த ஆட்டோ மீது கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் பள்ளி மாணவர்கள் தினமும் ஆட்டோவில் வந்து செல்வது வழக்கம். நேற்று (ஜூன் 12) மாலை பள்ளி முடிந்த பிறகு மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த கார் ஒன்று திடீரென ஆட்டோவின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ராதா (72) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நடராஜன் (70) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
காரை ஓட்டி வந்த ராஜமோகன் பலத்த காயமடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஆட்டோவில் பயணம் செய்த 5 பள்ளி மாணவர்கள் மற்றும் காரில் இருந்த ஒருவர் உள்பட 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதுவாக சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் அசுர வேகத்தில் வந்த கார் மோதும் காட்சிகள், அதன்பின் ஆட்டோ சாலையில் கவிழ்ந்த காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க : குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com