Rajmohan: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், மக்களுக்கு நல்லது செய்வதில்தான் கட்சிகளிடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்; வார்த்தை ஜாலங்களில் அல்ல என்று குறிப்பிட்டார்.
Rajmohan: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், மக்களுக்கு நல்லது செய்வதில்தான் கட்சிகளிடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்; வார்த்தை ஜாலங்களில் அல்ல என்று குறிப்பிட்டார்.

Published on: September 21, 2026 at 10:45 am
திருநெல்வேலி, செப்டம்பர் 21, 2026; திருநெல்வேலியில் நடைபெற்ற பொருநை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ் மோகன், செய்தியாளர்களைச் சந்தித்து சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டதன் மூலம் மக்கள் அனைவரும் சட்டமன்ற மாண்பையும், மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளையும் நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
அமைச்சர், இதற்கு உறுதுணையாக இருந்த முதலமைச்சருக்கும் சபாநாயகருக்கும், இதனை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் பேசிய கருத்துகள் உட்பட அனைத்தும் எந்தவிதத் தடையுமின்றி ஒளிபரப்பப்பட்டதையே உண்மையான ஜனநாயகத்தின் சான்று என அவர் வலியுறுத்தினார்.
அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், மக்களுக்கு நல்லது செய்வதில்தான் கட்சிகளிடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்; வார்த்தை ஜாலங்களில் அல்ல என்று குறிப்பிட்டார். TVK கூட்டணி என்பது எந்த ஒரு தனிநபரின் தயவிலும் இயங்கவில்லை; தமிழக மக்களின் வாக்குகளால் மட்டுமே இந்த ஆட்சி நடைபெறுகிறது என்பதை உறுதியாகத் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்த்தது குறித்தும் அவர் விளக்கமளித்தார். தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும், கூட்டணிக் கட்சிகளின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் எப்போதும் திறந்த மனதுடன் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இணைந்து விவாதிக்கும் சூழல் உள்ளதால், அரசு மக்கள் நலனை நோக்கியே தொடர்ந்து பயணிக்கும் என்றும் அமைச்சர் ராஜ் மோகன் வலியுறுத்தினார். இதன் மூலம் சட்டமன்ற நிகழ்வுகள் மக்களிடம் சென்றடைவதே உண்மையான ஜனநாயகம் என்பதை அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க; டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை திட்டம்; ரூ.20 ஆயிரம் முன்பணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com