Supreme Court: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகக் குழு அமைக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Supreme Court: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகக் குழு அமைக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Published on: November 5, 2026 at 1:50 pm
Updated on: November 5, 2026 at 1:51 pm
புதுடெல்லி, நவ.5, 2026: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க நிர்வாகக் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் பொது தீட்சிதர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவற்றைச் சீரமைக்க நிர்வாகக் குழுவை அமைத்திருந்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோர் அந்தக் குழுவில் இடம்பெற உத்தரவிடப்பட்டிருந்தது.
கோயிலின் புராதனக் கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாதது, கோயில் சொத்துகளைப் பாதுகாக்கத் தவறியது, வரவு செலவுக் கணக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் கோயில் வளாகத்தில் வணிக ரீதியான செயல்பாடுகள் நடைபெறுவது உள்ளிட்டவற்றை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. அதேநேரத்தில், கோயிலின் அன்றாட பூஜைகள் மற்றும் திருவிழாக்களை நடத்தும் உரிமை பொது தீட்சிதர்களிடமே தொடரும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க : தீபாவளிக்கு காலை 6–7 மணி, இரவு 7–8 மணி மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com