டெல்லியில் வாக்காளர் சிறப்பு திருத்தம்.. எல்.கே. அத்வானி, ஜெய்சங்கர் பெயர் நீக்கம்?

Delhi SIR : டெல்லியில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர் நடைபெற்று வரும் நிலையில், எல்.கே. அத்வானிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Published on: September 21, 2026 at 10:10 am

Updated on: September 21, 2026 at 10:11 am

புதுடெல்லி, செப்.21, 2026: டெல்லியில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் அவர்கள் அளித்துள்ள விவரங்களுக்கும், கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற SIR-ல் இடம்பெற்றிருந்த விவரங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

டெல்லியில் சுமார் 97 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி சுமார் 33.13 லட்சம் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்காளர்கள் சமர்ப்பித்துள்ள கணக்கெடுப்பு படிவங்களில் உள்ள தகவல்கள், 2002-ம் ஆண்டு நடைபெற்ற முந்தைய எஸ்.ஐ.ஆர்-ல் பதிவாகியிருந்த தகவல்களுடன் பொருந்தாத நிலையில் பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முன்னாள் ஜேஎன்யூ துணைவேந்தர் எம். ஜகதேஷ் குமார், முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே, முன்னாள் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, சிபிஐ இயக்குநர் பிரவீன் சூத் உள்ளிட்டோரும் நோட்டீஸ் பெறுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் மற்றும் அவரது மனைவிக்கும் “கடந்த எஸ்.ஐ.ஆர் உடன் மேப்பிங் செய்யப்படவில்லை” என்ற பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கபில் சிபல், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை விமர்சித்து, எஸ்.ஐ.ஆர் என்பதை சிறப்பு தீவிர நீக்கம் எனக் குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்குகள் நீக்கப்படுவதற்கான நடவடிக்கையாக இது மாறிவிடும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

ஆனால், டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. வாக்காளர் விவரங்களில் காணப்படும் முரண்பாடுகளை சரிசெய்வதற்காக, கணினியால் தானாக உருவாக்கப்பட்ட நோட்டீஸ்கள் அனுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பது வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல என்றும், தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 2026 பிரிக்ஸ் மாநாடு: முக்கிய சாதனைகள் என்ன? இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எவை?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com