தனிநபர் விலகலால் பாஜகவிற்கு எவ்வித தொய்வும் இல்லை.. நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: “தனிநபர் விலகலால் பாஜகவிற்கு எவ்வித தொய்வும் இல்லை” என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Published on: June 6, 2026 at 8:02 pm

சென்னை, ஜூன் 6, 2026: தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (சனிக்கிழமை) கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தனிநபர் விலகலால் பாஜகவிற்கு எவ்வித தொய்வும் இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்“ எனத் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியதை, கட்சியின் தேசியத் தலைமை முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி என்பது தனிநபரை நம்பி இயங்கும் கட்சி அல்ல, அது ஒரு வலுவான கொள்கை சார்ந்த இயக்கம். எனவே, அண்ணாமலையின் விலகலால் தமிழக பாஜகவிற்கு எந்தவொரு இழப்போ அல்லது பின்னடைவோ ஏற்படாது என்று கூறினார்.

புதிய கட்சி தொடங்குதல்

தொடர்ந்து, “இந்தியத் திருநாட்டின் ஜனநாயக அமைப்பில், யார் வேண்டுமானாலும் புதிய இயக்கம் அல்லது அரசியல் கட்சி தொடங்குவது அவர்களின் தனிப்பட்ட மற்றும் ஜனநாயக உரிமையாகும். திரு. அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆரம்பத்தில் மாநிலத் தலைமையிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை” என்றும் தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசியத் தலைவர்களைச் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளேன் என்றும் தெரிவித்தார் .

இதையும் படிங்க : பிரதமரின் தொலைநோக்குப் பார்வை.. பாஜக முன்னேறி வருகிறது.. தமிழிசை சௌந்தரராஜன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com