மலையாள நடிகர் சலீம் குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு.. ஐ.சி.யூ.வில் அனுமதி

Actor Salim Kumar: மலையாள நடிகர் சலீம் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published on: June 6, 2026 at 7:56 pm

கொச்சி, ஜூன் 4, 2026: தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது வென்டிலேட்டர் ஆதரவுடன் உள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்று (ஜூன் 6) காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, வென்டிலேட்டர் ஆதரவு வழங்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரது நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சலீம் குமார், 1997-ல் திரைப்பட உலகில் அறிமுகமானார்.

இவர், நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில், 2010-ல் அடமின்டே மஹன் அபு என்ற படத்திற்காக தேசிய விருது பெற்றார். மேலும், நான்கு முறை கேரள மாநில விருது பெற்றுள்ளார்.

என்ன பிரச்னை?

கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். மேலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் சமீபத்திய காலங்களில் திரைப்படங்களில் அவரது பங்கேற்பு குறைந்தது. இந்நிலையில், அவரது திடீர் உடல்நிலை குறைவு ரசிகர்களையும் சக நடிகர்களையும் கவலையடையச் செய்துள்ளது. இந்த நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com