Parandur Row : பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பாதிக்கும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Parandur Row : பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பாதிக்கும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Published on: July 9, 2026 at 11:36 am
சென்னை, ஜூலை 9 2026: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் தொடர்பாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியமான இந்தத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் தவெக அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் திரு. நிர்மல் குமாரின் பொய் பிரச்சாரமும், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு தவெக அரசு செய்யும் துரோகமும்!
— Nainar Nagenthran (@NainarBJP) July 9, 2026
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் திரு. ஜோசப்… pic.twitter.com/glRvnm1dm7
மேலும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு முறையான அனுமதி வழங்கப்பட்ட திட்டத்திற்கு, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் “ஓடுதளம் அமைக்க முடியாது” என கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்றும், இது தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு எதிரான செயல் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே கொள்கை அளவிலான அனுமதி வழங்கியுள்ளதாகவும், தொழில்நுட்ப நிபுணர்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்தபடி ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளையும் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது புதிய தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாக கூறுவது அரசியல் நோக்கத்துடன் செய்யப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தை இடநெருக்கடி காரணமாக மேலும் விரிவுபடுத்த முடியாத சூழலில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழகத்தின் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பாதிக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : 700 அரசு ஒதுக்கீட்டு MBBS இடங்கள் பறிபோகின்றன.. 6 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் தேவை.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com