சவுக்கு சங்கர் மீதான வழக்கு.. சென்னை ஐகோர்ட் ஜாமின்.. புகார் என்ன?

Shankar Gets Conditional Bail : சவுக்கு சங்கர் மீதான வழக்கில், சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Published on: May 20, 2026 at 4:43 pm

Updated on: May 20, 2026 at 4:54 pm

சென்னை, மே 20, 2026: பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது; அதாவது, ரெட் அண்ட் ஃபாலோ திரைப்படம் தொடர்பான அவதூறு வழக்கில் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில், விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த வழக்கு இன்று (மே 20ஆம் தேதி) நடைபெற்ற விடுமுறை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சக்திவேல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை முடிந்ததால் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். எனினும், சவுக்கு சங்கர் தினமும் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர், “ரெட் அண்ட் ஃபாலோ (RED AND FOLLOW)” திரைப்படம் குறித்து அவதூறு கருத்துகள் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தப் படம் போதை மருந்து வியாபாரத்தில் கிடைத்த பணத்தில் தயாரிக்கப்பட்டது என அவர் கூறியதால், புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை பட தயாரிப்பாளர் பி.மகேஷ் புகார் அளித்திருந்தார். மேலும் அந்தப் புகாரில், மகேஷிடம் சவுக்கு சங்கர் ரூ.10 லட்சம் கோரினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) 2023 சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் 40,000 மருந்துக் கடைகள் ஸ்டிரைக்.. கோரிக்கைகள் என்ன?

விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படும்.. பார்த்திபன் வழக்கை முடித்து வைத்து நீதிபதி கருத்து
HC Closes Parthiban’s Certificate Case

விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படும்.. பார்த்திபன் வழக்கை முடித்து வைத்து நீதிபதி கருத்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com