DK K Veeramani: திருச்சியில் காமராஜர் பெயரில் நூலகம்; தலைநகர் சென்னையில் காரல் மார்க்ஸ்க்கு சிலை உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
DK K Veeramani: திருச்சியில் காமராஜர் பெயரில் நூலகம்; தலைநகர் சென்னையில் காரல் மார்க்ஸ்க்கு சிலை உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Published on: April 3, 2025 at 5:32 pm
சென்னை ஏப்ரல் 3 2025: திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருச்சியில் காமராஜர் பெயரில் நூலகம் தலைநகர் சென்னையில் காரல் மார்க்ஸ்க்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அறிக்கையில் கி வீரமணி, ” திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் பொருளாதார தத்துவ கர்த்தா காரல் மார்க்சுக்கு சென்னை தலைநகரில் சிலை எழுப்பப்படும் என அறிவித்துள்ளார்.
இதனை வாழ்த்தி வரவேற்று பாராட்டி மகிழ்கிறோம். நமது திராவிட மாடல்ஸ் ஆட்சி தத்துவ தலைவர்களையும், தொண்டர் செம்மல்களையும் வருகின்ற தலை முறைகளுக்கு நினைவூட்டி வரலாற்றில் பெருமைப்படுத்துவது மிகவும் சிறப்பானது.
காரல் மார்க்ஸ் பற்றி வெகு மக்களிடையே தந்தை பெரியாரும் அவரது சுயமரியாதை இயக்கமும் அவர் நடத்திய குடி அரசு மற்றும் விடுதலை ஏடுகளும் விஞ்ஞான சோசியல் இயத்தை மக்களுக்கு விளக்கியுள்ளன.
அத்தோடு குழந்தைகளுக்கு காரல் மார்க்ஸ் என்ற பெயரையும் விட்டது உண்டு. அவர்களுக்கு தற்போது 90 வயது ஆகிறது. இது முக்கியமான சாதனையாகும்.
திருச்சியில் காமராஜர் நூலகம்
திருச்சியில் ₹290 கோடி மதிப்பில் அமைக்கப்படவிருக்கும் நூலகத்திற்கு கல்வி வள்ளல் காமராஜர் பெயர் வைக்கப்படும் என்ற அறிவிப்பு தந்ததும் மிகவும் பாராட்டி வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.
நாளும் இப்படி சாதனைக்கு மேல் சாதனை செய்து வரலாற்றில் பொன் ஏடுகளை பெருக்கிக் கொண்டே போகிறார்.
இதனால் கொள்கை எதிரிகளோ பொறுத்துக் கொள்ள முடியாமல் வெட்டி அவதூறு சேற்றினை ஆதாரம் இன்றி வீசுகின்றனர். பெரியார் மண் அவர்களை நன்கு புரிந்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: ஏப்.4 போராட்டம்.. களத்திற்கு வரும் விஜய்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com