உச்ச நீதிமன்றத்திற்கு புதிய ஐந்து நீதிபதிகள்.. யார் யார்.. முழு விவரம்!

Supreme court of india: உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Published on: June 2, 2026 at 12:09 pm

புதுடெல்லி, ஜுன் 2 2026: உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றனர். அவர்களுக்கு இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்திய தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 5 புதிய நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு நியமித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது.

அதன்படி, பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்ச்தேவா மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பள்ளி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தை சேர்ந்த கோவை மூத்த பெண் வழக்கறிஞர் வெங்கிடா சுப்பிரமணி மோகனாவும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

இந்த 5 பேரும் இன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுனர். இந்த புதிய நியமனங்கள் மூலம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் இந்த நியமனங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பயங்கர காட்டுத் தீ.. பரபரப்பு வீடியோ காட்சிகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com