Myanmar President India visit: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக மியான்மர் நாட்டின் நிலப்பரப்பு எந்தவிதத்திலும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று மியான்மர் அதிபர் யூ மின் ஆங் ஹ்லைங், பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்துள்ளார்.
Myanmar President India visit: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக மியான்மர் நாட்டின் நிலப்பரப்பு எந்தவிதத்திலும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று மியான்மர் அதிபர் யூ மின் ஆங் ஹ்லைங், பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்துள்ளார்.

Published on: June 2, 2026 at 12:30 pm
புதுடெல்லி, ஜுன் 2, 2026: 5 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் உ மின் ஆங் ஹ்லைங், நேற்று புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, எல்லை மேலாண்மை, இணைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, மியன்மார் அதிபர் உ மின் ஆங் ஹ்லைங், “இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக மியன்மார் நிலப்பரப்பு பயன்படுத்தப்படாது” என்று உறுதியளித்தார். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து செயல்படும் சில ஆயுதக் குழுக்கள் குறித்து பிரதமர் மோடி நேரடியாகக் கேள்வி எழுப்பியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகள்
இரு தரப்பும் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, எல்லை மேலாண்மை, அபிவிருத்தி உதவி, பிராந்திய நிலைமை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விரிவான விவாதம் நடத்தினர். குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், கல்வி, ஆற்றல், மற்றும் கிரிட்டிக்கல் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை வலியுறுத்தினர்.
இந்தியாவின் ஆதரவு
பிரதமர் மோடி, மியன்மாரின் அரசியல் சுயாட்சி மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு தரப்பும் “பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகளுக்காக நிலப்பரப்பை தவறாக பயன்படுத்தக் கூடாது” என்ற முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பு, இந்தியா-மியான்மர் இடையேயான நீண்டகால நட்பு மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய மூலோபாய அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மர், நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுடன் 1,640 கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இதற்கிடையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் மியான்மர் அதிபரை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் ஆங் ஹ்லைங் ஐந்து நாள் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று மும்பைக்கு சென்று தொழில் மற்றும் வணிக துறை தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்திற்கு புதிய ஐந்து நீதிபதிகள்.. யார் யார்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com