Narendra modi: ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17, 2026) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
Narendra modi: ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17, 2026) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

Published on: July 17, 2026 at 10:50 am
புதுடெல்லி, ஜூலை 17, 2026: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஹரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில், ஜிந்த்–சோனிபட் இடையே இயக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டின் ரயில்வே துறையில் தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்து முறையை நோக்கி எடுக்கப்பட்ட மிக முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
ஜிந்தில் உள்ள ஏகலவ்யா மைதானத்தில், சுமார் 14,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, அவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றி, இந்த திட்டங்கள் மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அமையும் என வலியுறுத்தினார்.
இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டு பொறியியல் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளின் மூலம் உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில், நாட்டின் மேம்பட்ட ரயில்வே பொறியியல் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. இது சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த அறிமுகத்துடன், ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இந்தியாவும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. இதன் மூலம், உலகளாவிய தூய்மையான போக்குவரத்து முயற்சிகளில் இந்தியா தனது இடத்தை வலுப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 19 நாள் தொடர் உண்ணாவிரதம்.. எப்படி இருக்கிறார் சோனம் வாங்சுக்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com