Sonam Wangchuk: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர்ந்து, 19 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
Sonam Wangchuk: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர்ந்து, 19 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

Published on: July 16, 2026 at 3:29 pm
புதுடெல்லி, ஜூலை 16, 2026 : சோனம் வாங்சுக் கடந்த 19 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது உடல்நிலை குறித்து கவலை எழுந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு தினசரி மருத்துவ பரிசோதனை நடத்தி, தேவையான சிகிச்சைகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாங்சுக்கின் உடல்நிலை அரசு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் கண்காணிக்கப்படும் என்றும், உடல்நிலை மோசமடையும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். நீதிமன்றம், “ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது” என்று வலியுறுத்தி, அரசின் நடவடிக்கையை பாராட்டியது.
வாங்சுக்கின் போராட்டம், இளங்கலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கியது. ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ நடத்திய இந்த போராட்டத்தில் அவர் முக்கிய பங்காற்றுகிறார்.
இதையும் படிங்க : சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம்.. மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com