டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு.. தூத்துக்குடிக்கு விமான சேவை கோரிக்கை!

Kamarajar Birthday Celebration: டெல்லியில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவரது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Published on: July 16, 2026 at 3:53 pm

புதுடெல்லி, ஜூலை 16, 2026: நவீன தமிழ்நாட்டின் சிற்பி கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 124ஆவது பிறந்த நாள் விழா ஜூலை 15, 2026 புதன்கிழமை டெல்லியில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாடாளுமன்றம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு டெல்லி தமிழ்ச்சங்கம் மற்றும் டெல்லி நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்க தலைவர் வக்கீல் சிவபாலமுருகன், பொதுச்செயலாளர் சத்யா அசோகன், நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் சூடாமணி நாடார், செயலாளர் டி.ரஞ்சித் சிங், பொருளாளர் முருகன், உறுப்பினர்கள் பெருமாள் நாடார், பார்த்திபன், அருண்குமார், ஜெபகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காமராஜரின் நினைவுகளைப் போற்றினர்.

விழாவுக்குப் பிறகு நாடார் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கனிமொழி எம்.பி. மூலம் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க தீர்மானிக்கப்பட்டது.

காமராஜரின் பிறந்த நாள் விழா டெல்லியில் தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையையும், அவரின் அரசியல் மற்றும் சமூக பங்களிப்புகளுக்கான மரியாதையையும் வெளிப்படுத்தியது. அதேசமயம், தூத்துக்குடி விமான சேவை கோரிக்கை, தமிழர்களின் தேவைகளை அரசிடம் வலியுறுத்தும் முயற்சியாக அமைந்தது.

இதையும் படிங்க : 19 நாள் தொடர் உண்ணாவிரதம்.. எப்படி இருக்கிறார் சோனம் வாங்சுக்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com