Vijay to protest against Waqf Amendment Bill: வக்ஃப் திருத்த மசோதா 2024க்கு எதிராக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போராட்டம் நடத்தவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Vijay to protest against Waqf Amendment Bill: வக்ஃப் திருத்த மசோதா 2024க்கு எதிராக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போராட்டம் நடத்தவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on: April 3, 2025 at 4:06 pm
சென்னை, ஏப்ரல் 3 2025: வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக, தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என கூறப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை (ஏப்ரல் 4 2025) நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக வக்பு வாரிய திருத்த மசோதா, மக்களவையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 3 2025) காலை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் வக்பு திருத்த மசோதா 2024, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்பு திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் வக்பு திருத்த மசோதாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவன தலைவர் நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், 2025 ஏப்ரல் நான்காம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என்றும் இதற்காக அனைத்து நிர்வாகிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மலைவேம்பு என நினைத்து கஞ்சா செடி வளர்த்த பெண்.. தூத்துக்குடியில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com