Redin Kingsley and Sangeetha couple: பிரபல நடிகர் ரெடி கிங்ஸ்லி, நடிகை சங்கீதாவை 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
Redin Kingsley and Sangeetha couple: பிரபல நடிகர் ரெடி கிங்ஸ்லி, நடிகை சங்கீதாவை 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
Published on: April 3, 2025 at 5:00 pm
சென்னை ஏப்ரல் 3 2025: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சங்கீதா என்ற நடிகையை 2023 இல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் கோலாக்கலமாக சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு சங்கீதாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த புகைப்படம் நடிகை சங்கீதா மற்றும் கிங்ஸ்லி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் அழகிய பெண் குழந்தையை வரவேற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் குழந்தையுடன் கிங்ஸ்லி இருப்பது போன்ற புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸில் சிதறும் சல்மான் கானின் சிக்கந்தர் .. 4-ம் நாள் வசூல் நிலவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com