தொடர்ந்து 2-வது நாளாக தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை! சென்னையில் இன்றைய நகை விலை என்ன?

Gold Rate : சென்னையில் அக்டோபர் 16-ஆம் தேதி தங்கம், வெள்ளி விலைகளில் மாற்றமில்லை. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையாகிறது.

Published on: October 16, 2026 at 1:03 pm

சென்னை, அக். 16, 2026:சென்னையில் இன்று (அக்டோபர் 16) தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,515-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,08,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (அக்டோபர் 15) விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் தங்கம் நீடிக்கிறது.

வெள்ளியின் விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று நிலவிய விலையே இன்றும் தொடர்கிறது.

கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13,590-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 15-ஆம் தேதி சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,08,120 ஆனது. இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி நீடிக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது ரூ.1,08,120 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஓராண்டில் ஒரு சவரனுக்கு ரூ.12,920 அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி.. தரவுகளுக்கு அப்பால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறதா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com