Man arrested for snatching chain: சென்னையில் காலிங் பெல் அழுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை எடுத்துட்டுள்ளது.
Man arrested for snatching chain: சென்னையில் காலிங் பெல் அழுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை எடுத்துட்டுள்ளது.
Published on: April 3, 2025 at 3:46 pm
சென்னை ஏப்ரல் 3 2025: சென்னையில் காலிங் பெல் அழுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலி பறித்துச் சென்ற இளைஞர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். முன்னதாக இந்தச் சம்பளம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் பெரும் வைரல் ஆகின. மேலும் தங்கச் சங்கிலியை பறிகொடுத்த பெண், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக சதீஷ் என்ற 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சதீஷ் மீது கொள்ளை முயற்சி, தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சதீஷ் மீது ஏற்கனவே பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மலைவேம்பு என நினைத்து கஞ்சா செடி வளர்த்த பெண்.. தூத்துக்குடியில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com