நிர்வாண படம் அனுப்பு.. 14 வயது சிறுமிக்கு தொந்தரவு.. வள்ளியூர் மாணவர் கைது!

Valliyur College student arrested: 14 வயது சிறுமியிடம் ஆபாச படம் கேட்டு மிரட்டிய வள்ளியூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

Published on: April 10, 2025 at 11:59 am

திருநெல்வேலி ஏப்ரல் 10 2025: சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், ” தன்னுடைய மகளை இளைஞர் ஒருவர் நிர்வாண படம் அனுப்ப கோரி மிரட்டல் விடுகிறார்” என தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் சிறுமிக்கு நிர்வாண படம் அனுப்புமாறு மிரட்டல் விடுத்தது வள்ளியூர் அருகே உள்ள கண்ண நல்லூர் என்ற ஊரைச் சார்ந்த சின்னத்துரை என்பது தெரிய வந்தது.

22 வயதான சின்னத்துரை, கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆவார். இதைத்தொடர்ந்து போலீசார் சின்னத்துரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் தலை மறைவு.. மத போதகர் ஜான் ஜெபராஜ் எங்கே?

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர் வாக்குமூலம்!
Australian Girl Killed in Pakistan

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com