தனியார் வங்கி பெண் ஊழியர் கொலை.. திடீர் திருப்பம்.. தகாத உறவு காரணமா?

Brother Behind Nellai Killing : திருநெல்வேலியில் வங்கி பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: May 18, 2026 at 8:06 pm

Updated on: May 18, 2026 at 8:08 pm

திருநெல்வேலி, மே 18, 2026: நெல்லை பாளையங்கோட்டையில் வங்கி பெண் ஊழியர் முத்துமாலை (36) அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இருவர் வழிமறித்து தாக்கி தப்பிச் சென்றனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து, திருநெல்வேலி பெருமாள்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முத்துமாலை தனது கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வாழ்ந்து வந்ததும், பின்னர் ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் உறவினர்கள் கண்டித்தும், அவர் பழக்கத்தை கைவிடவில்லை.

சகோதரரின் கொடூர முடிவு

இந்நிலையில், முத்துமாலையின் உடன்பிறந்த சகோதரர் பன்னீர்செல்வம், தகாத உறவை கைவிட மறுத்ததால், தனது சித்தி மகன் இசக்கிப்பாண்டி மற்றும் நண்பர் சிவா ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது.

கைது நடவடிக்கை

இந்த வழக்கில், மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, முதலில் இசக்கிப்பாண்டி கைது செய்யப்பட்டார். பின்னர் பன்னீர்செல்வம் மற்றும் சிவா ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சகோதரரால் நிகழ்த்தப்பட்ட இந்த கொலை சம்பவம், பாளையங்கோட்டை பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஸ்ரீபெரும்புதூரில் கானா பாடகர்கள் இரட்டை கொலை – பரபரப்பு.. குற்றவாளிகள் யார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com