மதுரை மத்திய தொகுதியில் தோல்வி.. அரசியலில் இருந்து பி.டி.ஆர் ஓய்வு?

Palanivel Thiaga Rajan : அரசியலில் இருந்து சிறுது காலம் ஓய்வு பெறப் போகிறேன் என பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Published on: May 18, 2026 at 7:45 pm

மதுரை, மே 18, 2026: மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் மதார் பதூருதின் முஸ்தபாவிடம் 19,128 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார்.

பாரம்பரிய அரசியல் குடும்பம்

பி.டி.ஆர், தமிழக அரசியலில் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா பி.டி. ராஜன், தந்தை பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் ஆகியோரின் பின்னர் மூன்றாம் தலைமுறையாக அரசியலில் கால் பதித்தவர். 2016 மற்றும் 2021 தேர்தல்களில் மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆவார்.

அமைச்சரவை பொறுப்புகள்

முன்னாள் நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு விவகாரம் மற்றும் அவரது உதவியாளர் தொடர்பான மோசடி விவகாரம் அவரது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

தோல்வி காரணங்கள்

இந்த நிலையில், அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், எதிர்கட்சித் தலைவர்கள் வேட்பு மனுவில் தவறான தகவல்கள் இருந்ததாகவும், ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். தேர்தல் தோல்வி எதிர்பாராததாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சீனுக்குள் வரும் அண்ணாமலை.. காய் நகர்த்தும் பா.ஜ.க தேசிய தலைமை?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com