Annamalai in Trichy: தமிழ்நாட்டில் ஒரு பெண் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர் என மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
Annamalai in Trichy: தமிழ்நாட்டில் ஒரு பெண் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர் என மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: April 20, 2026 at 10:00 am
திருச்சி, ஏப்.20, 2026: 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக-காங்கிரஸ் கூட்டணி தடுத்து வருவதாகக் குற்றம் சாட்டிய தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “ஒரு பெண் கூட அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு விவகாரம்
மேலும், இந்தத் தேர்தலை மகளிர் பிரதிநிதித்துவம் மற்றும் பாதுகாப்புக்கான ஒரு பொது வாக்கெடுப்பு எனவும் அண்ணாமலை கூறினார். திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் மணச்சநல்லூரில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய அண்ணாமலை இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து, “மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை முடக்குவதற்கு திமுகவும் காங்கிரஸும் சதி செய்துள்ளன; பிரதமர் நரேந்திர மோடி 2029-க்குள் அதை அமல்படுத்துவதை உறுதி செய்வார்” என்றார்.
கல்குவாரி பிரச்னை
இதற்கிடையில், ஸ்ரீரங்கத்தில் பேசிய அண்ணாமலை, இந்தத் தேர்தலை ஒரு “கௌரவப் பிரச்சினை” என்று குறிப்பிட்டார். மேலும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பழனியண்டி, சட்டவிரோத கல் குவாரி மூலம் தொகுதிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும், கஞ்சாவும் மதுவும் “வீட்டு வாசலுக்கே” வந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், கரூர் மற்றும் மிஞ்சூரில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” என்றார்.
கிட்னி முறைகேடு
மணச்சநல்லூரில், வேட்பாளர் எஸ். கதிரவனைத் தாக்கிப் பேசிய அண்ணாமலை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளில் முறைகேடுகள் நடந்தது என்றார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்.23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com