மார்க்கண்டேயன் சர்ச்சைப் பேச்சு; நடவடிக்கை கோரி அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தல்

Vanni Arasu Condemns MLA’s Speech: முதலமைச்சர் ஜோசப் விஜயை குறித்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்மீது சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

Published on: July 21, 2026 at 11:32 am

சென்னை, ஜூலை 21, 2026 : சட்டப்பேரவைக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேச்சைத் தொடர்ந்து, தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில், இன்று அதிகாலை போலீசார் மார்க்கண்டேயனின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், சட்டமன்ற வளாகத்திற்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டியுள்ள அமைச்சர் வன்னியரசு மார்க்கண்டேயனின் பேச்சு குறித்து சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் வன்னி அரசு, சட்டமன்றத்தில் வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுகளுக்கு இடமில்லை என்றும், இதுகுறித்து அவைத் தலைவர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், “எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதைத்தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

இதையும் படிங்க : தி.மு.க எம்.எல்.ஏ அதிரடி கைது.. 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு!

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!
Minister Viswanathan on Mekedatu

 காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு சொந்தம்.. மேகதாதுவில் ஓர் செங்கலை கூட வைக்க அனுமதியோம்.. அமைச்சர் விஸ்வநாதன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com