தி.மு.க ஆதரவாளர்களை, ‘அரசியல் விஞ்ஞானிகள்’ என கலாய்த்த விஜய்.. நாமக்கல்லில் பரபரப்பு உரை!

TVK Vijay mocked DMK supporters : தி.மு.க ஆதரவாளர்களை அரசியல் விஞ்ஞானி என கலாய்த்துள்ளார் நடிகர் விஜய். நடிகர் விஜய் இன்று நாமக்கல்லில் பரப்புரை செய்தார்.

Published on: September 27, 2025 at 4:23 pm

நாமக்கல், செப்.27, 2025: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று (சனிக்கிழமை) நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, தி.மு.க ஆதரவாளர்களை அரசியல் விஞ்ஞானிகள் என கலாய்த்தார். தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், “மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தவெக ஆட்சியில் செய்து கொடுப்போம் என்று கூறினால், புதிதாக ஏதாவது கூறுங்கள் என அரசியல் விஞ்ஞானிகள் கேட்கிறார்கள்” என்றார்.

அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை..

மேலும், “புதிதாக என்றால் என்ன? வீட்டில் அனைவரும் விமானம் ஓட்ட வைப்போம் என்று கூறலாமா? அல்லது அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை அமைப்போம் என்று கூறலாமா? எனவும் நடிகர் விஜய் கேள்வியெழுப்பினார்.

தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?

தொடர்ந்து திமுக-பாஜக இடையே கள்ள கூட்டணி இருக்கிறது எனவும் நடிகர் விஜய் கூறினார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர், “பாஜக – திமுக இடையே மறைமுக உறவு உள்ளது. திமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்று தான்” என்றார்.

தி.மு.க. vs த.வெ.க.. யார் ஆட்சி வேண்டும்?

இதையடுத்து, “மோசமான ஆட்சியை தமிழகத்தில் கொடுக்கும் இந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? மோசமான ஆட்சியை தமிழகத்தில் கொடுக்கும் இந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? இல்லை நம்முடைய தவெக ஆட்சி வேண்டுமா? மக்கள் நீங்கள் தான் அதை சொல்ல வேண்டும்” என்றார்.

நம்பிக்கையை காப்பாற்றுவேன்

மேலும், “நீங்கள் என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்; வரும் தேர்தலில் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்றார்.

இதையும் படிங்க : காபி, தயிர் வடை சாப்பிட்டோம்.. கரூர் எம்.பி எங்கே? சிரித்துக்கொண்டே வந்த ஜோதிமணி!

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!
Defection Row

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்!
Vietnam Boat Tragedy

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின்

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்
Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com