ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி உள்ளது?..அமைச்சர் தகவல்

Rajinikanth health condition | நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Published on: October 1, 2024 at 1:44 pm

Updated on: October 1, 2024 at 1:46 pm

Rajinikanth health condition | நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடி வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடமும் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் ரஜினிகாந்த் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார். 2011-ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிங்கப்பூரின் உயர்மட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டு , அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், 2021ல் ரஜினிக்கு கரோடிட் ஆர்டரி ரிவாஸ்குலரைசேஷன் ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது, ​​அவர் டிரான்ஸ்கேட்டர் எண்டோவாஸ்குலர் அயோர்டிக் ரிப்பேர் (TEVAR) எனப்படும் உயர்தர மருத்துவ செயல்முறைக்கு உட்பட்டுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தெரிவித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அச்சப்படும் அளவுக்கு எதுவுமில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையே மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை ஏதும் செய்யப்படவில்லை. தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க

ரஜினி பிறந்தநாள் ட்ரீட் ; நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது தளபதி thalapathy movie is being re released tomorrow

ரஜினி பிறந்தநாள் ட்ரீட் ; நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது தளபதி

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நாளை தளபதி படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது….

ரஜினியுடன் பேசியது என்ன; நான் சங்கியா? பாட்ஷா ஆக மாறிய சீமான்! Seeman answered about what he talked to Rajinikanth about

ரஜினியுடன் பேசியது என்ன; நான் சங்கியா? பாட்ஷா ஆக மாறிய சீமான்!

“ரஜினிகாந்த் உடன் அரசியல் பேசினேன்; நான் சங்கி என்றால் அவர்கள் சொங்கி” என தன் மீதான விமர்சனத்திற்கு சுடச்சுட பதில் அளித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின்…

ரஜினியின் கூலி படத்தில் அமீர் கான்; வெளியான புதிய அப்டேட்! Aamir Khan in Rajinikanths Coolie

ரஜினியின் கூலி படத்தில் அமீர் கான்; வெளியான புதிய அப்டேட்!

Aamir Khan in Rajinikanths Coolie | ரஜினிகாந்தின் கூலி படத்தில் அமீர் கான் இணைந்து நடிக்கிறார்….

அமேசான் தளத்தில் வேட்டையன்: எப்போது ரிலீஸ் தெரியுமா? vettaiyan ott amazon prime video release date

அமேசான் தளத்தில் வேட்டையன்: எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vettaiyan OTT Release date | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வெளியாகிறது….

‘மருத்துவர்களின் மேதமை ரஜினியை மீட்டெடுக்கும்’: வைரமுத்து Vairamuthu wishes to Rajinikanth a speedy recovery

‘மருத்துவர்களின் மேதமை ரஜினியை மீட்டெடுக்கும்’: வைரமுத்து

Vairamuthu wishes Rajinikanth | “சர்வதேசத் தரத்தில் இயங்கும் மருத்துவர்களின் மேதைமை ரஜினியை மீட்டெடுக்கும்” என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com