Chennai International Airport | மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைக்குஞ்சுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆண் பயணிகள் இருவர் சந்தேகப்படும் வகையில் இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, சாக்லேட், பிஸ்கட் மற்றும் பொம்மைகள் வைத்திருப்பதாக முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர். சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கூடைகளுக்குள் ஏராளமான சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். மேல் விசாரணைக்காக பெசன்ட் நகரில் உள்ள யூனியன் வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஒன்றிய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து, ஸ்லைடர் ஆமைகளை ஆய்வு செய்தனர்.
அவற்றில், 12 இறந்து கிடந்தன. மேலும், 19 அல்பினோ சிவப்பு காது ஸ்லைடர் ஆமை வகையைச் சேர்ந்தவை என்பதும் தெரியவந்தது. மேலும், கடத்தல் காரர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மலேசியாவில் இருந்து எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியா வந்துள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆமைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மற்ற விலங்குகளுக்கு தொற்று ஏதும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு நோக்கங்களுக்காக சுங்க அதிகாரிகள் 4,986 உயிருள்ள ஆமைகளை மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர், அதே நேரத்தில் இறந்த 12 ஆமைகள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டன.
இதையும் படிங்க
Holiday for 7 schools in Chennai: சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5 2025) 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளின் விவரங்களை பார்க்கலாம்….
Chennai: சென்னையில் 4 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. அது எந்தெந்த இடங்கள் தெரியுமா?…
Vaiko: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில், “, மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும்…
Amit Shah chennai visit: சென்னை வரும் அமித் ஷாவை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது….
ED search at the Gokulam Groups office: ஃபெமா மீறல் விசாரணை தொடர்பாக சென்னையில் உள்ள எம்பூரான் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்