ED search at the Gokulam Groups office: ஃபெமா மீறல் விசாரணை தொடர்பாக சென்னையில் உள்ள எம்பூரான் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார்கள்.
ED search at the Gokulam Groups office: ஃபெமா மீறல் விசாரணை தொடர்பாக சென்னையில் உள்ள எம்பூரான் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார்கள்.
Published on: April 4, 2025 at 2:01 pm
சென்னை, ஏப்.4 2025: அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) மீறல்கள் தொடர்பாக சென்னையில் உள்ள கோகுலம் குழும அலுவலகத்தில் அமலாக்க இயக்குநரகம் (ED) வெள்ளிக்கிழமை (ஏப்.4 2025) சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையானது, கோடம்பாக்கத்தில் உள்ள குழுவின் வளாகத்தில் நடைபெற்றது. மேலும் சென்னை சகாக்களுடன் ஒருங்கிணைந்து கொச்சி பிரிவு அமலாக்க அதிகாரிகள் தலைமையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
கோகுலம் கோபாலன் தலைமையிலான கோகுலம் குழுமம் 2023 முதல் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலமுறை விசாரிக்கப்பட்டுள்ளார் கோபாலன். கோபாலன், வணிகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார். அவரது வணிகம் சிட் ஃபண்ட்ஸ், நிதி, திரைப்பட தயாரிப்பு, விளையாட்டு மற்றும் விருந்தோம்பல் என நீண்டது.
இந்த நிலையில், சமீபத்தில் சீற்றத்தைத் தூண்டிய சர்ச்சைக்குரிய எம்பூரான் படத்தின் தயாரிப்பாளரும் கோபாலன் ஆவார். இருப்பினும், நடந்து வரும் சோதனை திரைப்பட சர்ச்சையுடன் தொடர்பில்லாதது என்றும், ஃபெமா மீறல்கள் குறித்த விசாரணையில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : திருச்சியில் காமராஜர் நூலகம்.. சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை.. திராவிடர் கழகம் வரவேற்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com